Thursday 24 February 2011

சில நிஜங்கள் ............சில நியாயங்கள்

                                                                                                                                                          
 
                           
                                                                                                         
                                              ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி துணை
                              
                                       சில நிஜங்கள் ............சில நியாயங்கள் ...                                                                                                                   
            ஆட்டோகாரனுக்கு பணத்தை எண்ணி கொடுத்து விட்டு , லக்கேஜ்களுடன் கிருத்திகா  ஆட்டோவிலிருந்து  இறங்கியபோது , அந்த ' அபார்ட்மெண்டின் ' வாட்ச்மேன் குப்தா அவளை நோக்கி மூச்சிரைக்க  ஓடி வந்தான் ;
                                                                   '' ஆயியே பெகன்ஜி ...... பாய் சாப் ஆபீஸ் சலா கயா......சாவி மேரே பாஸ் ஹே ....''
                                 என்றவாறு வீட்டு சாவியை அவளிடம் நீட்டினான் அவன் ;
மறுகணம் அவளது முகம்  ஏமாற்றத்தில் சுருங்கி போனது ; உள்ளுக்குள் பொங்கி வந்த எரிச்சலை வெளிக்காட்டாமல்  அவனிடமிருந்து சாவியைப் பெற்றுக் கொண்டு, லிப்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் அவள் ; முதல் தளத்தில் அமைந்திருந்த தனது  ப்ளாட்டை  திறந்து உள்ளே சோபாவில் ' பொத்' தென்று விழுந்தவள் , ஆயாசத்துடன் கண்களை இறுக மூடிக் கொண்டாள்;  கணவன்  சிவராம்   ஸ்டேஷனுக்கு வருவதாய் சொல்லி விட்டு வராமலேயே இருந்து விட்ட ஏமாற்றம் , இப்போது கோபமாய் உருமாற ........பிரயாண அசதியும் உடன் சேர்ந்து கொள்ள ...லேசாய் தலையை வலிக்கத் துவங்கியது அவளுக்கு  இப்போது !...கூடப் பிறந்த அண்ணனின் திருமண நிச்சயதார்த்த விழாவை முன்னிட்டு கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கோயமுத்தூர் சென்றிருந்தவள் ,  நேற்று இரவு அங்கிருந்து  கிளம்பி சற்று முன்பு தான் வந்திருந்தாள் ;
                                                          சுவர் கடிகாரம் காலை மணி ஒன்பது  என்று அறிவிக்க ....சூடாய் காபி சாப்பிட வேண்டும்போலிருந்தது அவளுக்கு ; தளர்ந்த நடையுடன் சோபாவிலிருந்து எழுந்து கொண்ட கிருத்திகா, பின் நேராக  வாஷ்பேசினுக்குச் சென்று முகத்தைக் கழுவிக் கொண்டு கிச்சனுக்குள் நுழைந்தாள்; ..கறை படிந்திருந்த கேஸ் ஸ்டவ் ...சிங்கில் அம்பாரமாய் குவிந்து கிடக்கும் பாத்திரங்கள்  .... ஆங்காங்கே இறைந்து கிடக்கும் ...வாட்டர் பாட்டில்கள் ...இப்படி ஒவ்வொன்றாய் அவள் பார்வையில் பட ...மனதிற்குள் பொருமியவாறே ப்ரிட்ஜைத் திறந்து பால் பக்கெட்டை எடுத்தாள் அவள் ;
                          ' ச்சே ...என்ன மனிதர் ....ஒரு நாலு நாள் நான்  ஊரில் இல்லாவிட்டால் இந்த அளவிற்கு அலங்கோலமாகவா வீட்டை வைத்துக் கொள்வது  ' ...உள்ளுக்குள் அங்கலாய்த்தவாறே காபியைக் கலந்து கோப்பைக்குள் நிரப்பிக் கொண்டு  அவள் ஹாலுக்கு வந்த போது செல்போன் அலறியது !...காப்பிக் கோப்பையை டீப்பாயில் வைத்து விட்டு , செல்போனைக் காதில் பொருத்திக் கொண்டாள் அவள் ; மறு முனையில் கணவன் சிவராமின் உற்சாகக்   குரல் !
                                        ''  ஹாய்  குண்டூஸ் ! ...எங்க இருக்கே?''
            மறு கணம் கோபத்தில் படபடத்தாள் அவள்;
                                         '' ஸ்டேஷனிலே!   
....... உங்களுக்காகத் தான் ஒன் அவராய் வெய்ட் பண்ணிக்கிட்டு இருக்கேன் !...எப்போ வரீங்க ?...'' அவளின் வார்த்தைகளை நிஜம் என்று நம்பிய சிவராம் மறு முனையில் ஆதங்கத்தில்  பட படத்தான் ; .....
                                         '' ஒ  காட்  ...ஸ்டேஷனிலா இருக்கே ?.....  வெரி சாரிடா கிருத்தி !..என்னால இப்போ அங்கே வர முடியாதுடா கண்ணம்மா ....ஏன்னா இப்போ நான் ஆபீஸ்ல இருக்கேன் !.........!....ஒரு ஆட்டோ பிடிச்சு வீட்டுக்குப் போயிடேன் ப்ளீஸ் !....என் கண்ணு இல்ல ..''....அவன் தவிப்பையும் , கெஞ்சலையும் உள்ளூர  ரசித்தாள் அவள் ;  பின் படு சீரியசான தொனியில் ,  ,
                                      ....''  ஊஹூம் ....மாட்டேன் ஷிவா  !....எனக்கு ஒரு போன் பண்ணி சொல்லியிருக்கலாம் இல்ல ?''  காப்பியை உறிஞ்சியவாறே ..வேண்டுமென்றே சீண்டினாள் அவனை ;
பதிலுக்கு அவளை சமாதானப் படுத்தும் விதமாய் , குரலை அதிகம் உயர்த்தாமல் அவன் ,
                            '' ப்ளீஸ் ..கிருத்தி !.........நா சொல்றதைக் கொஞ்சம் பொறுமையாய்  கேளேன் !.....இன்னிக்கு சாட்டர்டே தானே !.. ஆக்சுவலி , ..ஐயாவோட பிளான் ...என்ன தெரியுமா ?..ஸ்டேஷனிலேருந்து உன்னை அழைச்சுட்டு வந்ததும் ......வீட்ல .'' ஹாயாய் '' ஒரு  குட்டி தூக்கம் போட்டுட்டு ...........அப்புறம்  நிதானமாய் குளிச்சுட்டு ....ஹோட்டல் சரவணா போய் நாம ரெண்டு பெரும் லஞ்ச் சாப்பிடலாம்னு  !.......ஹூம் .என்ன பண்றதுடா செல்லம் !.... ,,எல்லாம் ஸ்பாயில் ஆயிடுச்சு !கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாம நேத்து நைட் எங்க எம் .டி எனக்கு ' கால் ' பண்ணி என்னை இன்னிக்கு ஆபிசுக்கு வரச் சொல்லிட்டாரும்மா !....காலையில எட்டு மணிக்கே  ஆபீஸ் வந்துட்டேன் !...என்னால ஸ்டேஷனுக்கு வர முடியாதுங்கற விஷயத்தை உன் கிட்ட சொல்லலாம்னு , உன்னோட மொபைலுக்கு காண்டாக்ட் பண்ணினேன் !...பட் ,  நீ ட்ரைன்ல இருந்ததால  உனக்கு சிக்னல் கிடைக்கலை போல  இருக்கு ! !....எஸ் ...சீரியசாய்மா !.........எம் .டி  யோட ஒரு முக்கியமான மீட்டிங்க்ல இருந்ததால , இத்தனை நேரம் மொபிலை ஆப் பண்ணி வெச்சிருந்தேன் !....இப்ப தான் மீட்டிங் முடிஞ்சது !...ஆனா இன்னும் வொர்க் முடியலை !....இன்னும் ரெண்டு கிளையண்ட்ஸ்  வேற வருவாங்க !....அநேகமா நைட் தான் வீட்டுக்கு வருவேன் ! !.....ச்சே !....பேசாம இந்த வேலைய ரிசைன்  பண்ணிடலாம்னு கூட தோணுது !...லீவு  நாளில கூட மனுஷனை ஜாலியாய் இருக்க விடாம !.....என்ன லைப் !......ப்ளீஸ் ட்ரை டு அன்டர்ச்டன்ட்  மீ கண்ணம்மா .''....''  ..கெஞ்சுகிற தொனியில்   பேசினான் அவன் ; 
 சிவராம் ஐ ,ஐ .டி யில் கம்ப்யூட்டர் படித்து விட்டு , மிகப் பிரபலமான   கம்ப்யூட்டர் கம்பெனியொன்றில்  பொறுப்பான பதவி வகிப்பவன் ;  அவனுடைய சிரமம் கிருத்திகாவிற்கும் புரியாமலில்லை ; இருந்தாலும் மணமாகி நான்கே மாதங்கள் ஆகியிருந்த நிலையில் ,  விடுமுறை நாட்களைக் கூட விட்டு வைக்காமல் ..சதா சர்வ காலமும்  ,வேலை வேலை என்று  ஆபீசே கதி என்று   அவன் பழியாய்க் கிடப்பது அவளுக்கு சலிப்பை ஏற்படுத்தியது ! ....அதிலும் .... கூடப் பிறந்த அண்ணனின் நிச்சயதார்த்த விழாவிற்கு கூட , வர முடியாமல் தான் மட்டும் போய் விட்டு வந்தது அவளது எரிச்சலை இரட்டிப்பாக்கியது ! .....பாவம்  அவளும் ஆசாபாசங்கள் நிறைந்த சராசரி பெண் தானே ?                                                                  

     ''   என்ன ஷிவா நீங்க !.....பொழுதன்னிக்கும்  ஆபீஸ் ...எம் .டி .....அப்புறம்   மீட்டிங் ....எப்ப பாரு .இதயே சொல்லுங்க !.....ஹூம் ..நீங்க ஸ்டேஷனுக்கு வந்திருப்பீங்கனு ஆசை ஆசையாய் எதிர்பார்த்து , ஏமாந்தது தான் மிச்சம் !....நீங்க தூங்கிட்டிங்களோனு  நெனச்சு , ஒரு ஆட்டோ பிடிச்சு வீட்டுக்கு வந்து பாத்தா , நீங்க ஆபீஸ் போயிருக்கரதாய் சொல்லி வாட்ச்மேன் குப்தா, வீட்டு சாவியை எடுத்து நீட்டறான் .....!'' அவளை மேற்கொண்டு பேச விடவில்லை சிவராம் ; உற்சாகமும் , படபடப்புமாய் ,
                ''  குட் .....அப்போ வீட்ல தான் இருக்கியா ?....சோ ச்வீட்  !.......'' அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே , எம் .டி இடமிருந்து அழைப்பு வர ......'படக் ' கென்று ..மொபைலை ஆப் செய்து விட்டு ஓட்டமும் , நடையுமாய் எம். டி அறையை நோக்கி விரைந்தான் அவன் ; காலிக் கோப்பையை சிங்கில் போட்டு விட்டு , ....வாட்ச்மேன் குப்தாவிடம் சொல்லி  வேலைக் காரி சரோஜாவை அழைத்து வரச் சொல்லலாம் என்று எண்ணியவாறே கிச்சனிலிருந்து வெளியே வந்தவளுக்கு அப்போது தான் நினைவுக்கு வந்தது  சரோஜா ஒரு வாரம் லீவு போட்டு விட்டு மதுரை சென்றிருந்தது !..நாளை மறுநாள் தான் வருவாள் !.....மனச்சோர்வும் , உடல் அழர்ச்சியும் ..அவளை ஆட்கொள்ள  சோபாவில் ஆயாசத்துடன் சாய்ந்து கொண்ட அக்கணம்............ மொபைல் அலறியது !..... சுவிட்சை  ஆன் செய்தவள் , அடுத்த கணம் சந்தோஷத்துக்கு தாவினாள்!....மறு முனையில் அவளது ஆருயிர் தோழி மதுவின் குரல் !
......................................'' ஹாய் கிருத்தி !.....எப்டியிருக்கே ?...''
.....................................'' சூப்பராயிருக்கேன் !....வாட் எ ப்ளசன்ட் சர்ப்ரைஸ் !....ரொம்ப நாளாச்சு உன் கூட பேசி !....எப்டியிருக்கே மது !''
....................................'' ம்ம் ....நாட் ஸோ பேட் !....ஆமா ....நீ இப்போ எங்க இருக்கே ? '' மதுவின் குரலில் சுரத்தில்லை ; 
                                        '' வீட்ல தான் ! ஏன் கேக்கறே !''
                                       '' கொஞ்சம் பேசணும்பா !...ஆர்  யூ ப்ரீ நவ் ''?
                                    ''    யா ..என்  ஹஸ்பன்ட் ஷிவா கூட வீட்ல இல்ல !...ஆபீஸ் போயிருக்கார் !.....நீ தாராளமாய் வா '' !
                                     '' ஒகே ....நா இப்போ சிட்டி சென்டர்ல இருக்கேன் !......இன்னும் த்ரீ அவர்ஸ்ல அங்கே இருப்பேன் !.....பை''                                                                                    
                  அவளது வருகை  அவள் மனதில் ஒரு புறம் மகிழ்ச்சியை அளித்தாலும் ....கூடவே கொஞ்சம் குழப்பத்தையும் உண்டு பண்ணியது !.....' என்னவாக இருக்கும் ?'   ஒரு கணம் .
 யோசித்தவள் ......பின் சுறுசுறுப்புக்குத் தாவினாள் !...!!..................................
                                                                            '  மளமள ' வென்று வீட்டைப் பெருக்கி , சுத்தம் செய்து ......வாஷிங் மெஷினில் துணிகளைப் போட்டு விட்டு .....பாத்திரங்களைத் தேய்த்து ......அடுப்பு துடைத்து ....இரவு உணவுக்குத் தேவையான காய் கறிகளை பிரிட்ஜிலிருந்து எடுத்து நறுக்கி முடித்து விட்டு ....சிவராமுக்குப் பிடித்த ஆலு சப்பாத்தியும் , வெஜிடபுள் பனீர் மசாலாவும் செய்து டைனிங் டேபிளில் வைத்து மூடிவிட்டு .........வேலை செய்த அலுப்பு தீர குளித்து முடித்து விட்டு வந்த போது மணி பதிநோன்றரையை  நெருங்கியிருந்தது !....கிச்சனுக்குள் நுழைந்த கிருத்திகா  பிரிட்ஜைத் திறந்து  '' ஜிலென்று ' கூலட்ரிங்க் ''பாட்டில் ஒன்றை  எடுத்துக் கொண்டு  ஹாலுக்குப் பிரவேசித்த அக்கணம் ...............
                                                    '' ட்ரிங் ...ட்ரிங் ....''
வாசலில் பெல் அழைக்க ....உற்சாகத்துடன்  கதவைத் திறந்தவள் மறுகணம்  சந்தோஷத்தில் முகம் மலர்ந்தாள் !.....எதிரே  புன்னகையுடன் நின்றிருந்தாள் அவளது ஆருயிர்த் தோழி , மது !  அந்த  நீல நிற ஜீன்ஸ்  , ஒய்ட் கலர் டி . ஷர்ட் அவளுக்கு வெகு பாந்தமாக இருந்தது !  ;  ' பம்' மென்று பரந்த கூந்தலை  ' கிளிப் ' போட்டு அடக்கியிருந்தாள் அவள் ;
                                                              '' ஹேய்  மது !...உனக்காகத் தான் காத்துக்கிட்டிருக்கேன் !.......வாடி  உள்ளே !''  சுவாதீனமாய் அவள் கரங்களைப் பற்றியவாறு ....முகம் மலர அவளை  வரவேற்றாள் கிருத்திகா ; .......எப்போதும் ' கல கல ' வென்று சிரித்துப் பேசிக் கொண்டு, துயரத்துக்கும் தனக்கும்  வெகு தூரம் என்கிற மாதிரி இருப்பவள் மது ; ஆனால் கிருத்திகாவோ அவளுக்கு நேரெதிர் ! ....படு மூடி டைப் ; எவரிடமும் அத்தனை சுலபத்தில் பேசி விட மாட்டாள் ; கல்லூரி நாட்களில் மதுவிடம் மட்டும் சற்று நெருக்கம் உண்டு அவளுக்கு ; பட்டப் படிப்பு முடிந்த கையுடன் , கிருத்திகாவுக்கு திருமணம் முடிந்து விட ........மதுவுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை ; மின் விசிறியை வேகமாக சுழல விட்டவாறே , கிருத்திகா ,
                                                             '' மேடம் ரொம்ப பிசி போல இருக்கு .....என் கல்யாணத்துக்குக் கூட வராம இருந்துட்டிங்க? .   ''...'..பளிச் ' சென்று கண்ணடித்து ,  விகல்பமின்றி சிரித்த
             வளுக்கு புன்னகையுடன் பதிலளித்தாள் மது ;
              ''....................'' வெரி சாரி கிருத்தி !...உன் கல்யாணத்தின் போது நான் ஊர்லையே இல்லடி !...கல்கத்தாவிலே இருக்கற எங்க அத்தை வீட்டுக்குன்னா போயிருந்தேன் ?......போன வாரம் தான் இங்கே வந்தேன் !.....அது போகட்டும் !...எப்டியிருக்கு உன் மேரீட் லைப் ?....''  கேட்ட மதுவுக்கு உற்சாகமாய் பதிலளித்தாள் கிருத்திகா ;
                                '' சூப்பர் !.....ஷிவா அநியாயத்துக்கு நல்லவர்  தெரியுமா ?!..ரொம்ப ஹாப்பியாய் இருக்கேன் !....அநேகமாய் அடுத்த மாசம்   அவர் , பிராஜக்ட் வேலையாய் யு .எஸ் போனாலும் போவார்!...ரெண்டு வருஷமாகும் இங்க வர !....''
                      '' அப்டீன்னா நீ ?'' புருவம் முடிச்சிடக் கேட்டவளுக்கு புன்னகையுடன் பதிலளித்தாள் கிருத்திகா ;
                         '' ரெண்டு பேரும் தான் !......!...  நெக்ஸ்ட் மந்த்  எங்க அண்ணாவோட கல்யாணம்  !.....அது முடிஞ்ச  கையோட நாங்க ரெண்டு பேரும் யு . எஸ்   கெளம்பறோம் !  ....எங்கேஜ்மென்ட்  முடிஞ்சு இன்னி காலையில தான் கோம்புத்துர்லேருந்து  வந்தேன் !...அது போகட்டும் !...நீ எப்போ கல்யாண சாப்பாடு போடப் போறே?''
 மறு கணம் மதுவின் முகத்தில் வாட்டம் !                            
..''...கிருத்தி!... அது விஷயமாய்  நான் உன் கிட்ட கொஞ்சம் மனம் விட்டுப் பேசணும்டி ''!....
              ''ஷ்யூர் ....!..ஒன் மினிட் மது !...உனக்கு குடிக்க ஏதாவது கொண்டு வரேன் !'' பதிலுக்கு காத்திராமல் உள்ளே சென்றவள் , அடுத்த ஐந்தாவது நிமிடம்   .மணக்க , மணக்க ஏலக்காய் டீ சகிதம் அவளெதிரே அமர்ந்து கொண்டாள் ;
                                           '' இந்தா !..முதல்ல ..சூடாய் டீ சாப்பிடு !.....மது !....ஷிவா இப்போதைக்கு வர மாட்டார் !....இப் யூ டோன்ட் மைன்ட் நாம ரெண்டு பேரும் பக்கத்தில இருக்கிற பார்க்குக்குப் போகலாமா ? ''....................
            அடுத்த ஐந்தாவது நிமிடம் இருவரும் பார்க்கில் இருந்தார்கள் ; அன்று ' சாட்டர்டே ஆதலால்  பார்க்கில் ஏகத்துக்கு கூட்டம் ; ஒரு ஒதுக்கு புறமான இடமாக பார்த்து இருவரும் அமர்ந்து கொண்டார்கள் ;
 தலையைக் குனிந்தவாறு மணலை அளைந்தபடி எதுவும் பேசாமல் அமர்ந்திருக்கும் மதுவை  கிருத்தியின்  குரல் உலுக்கிப் போட்டது !
                                    '' ஏய் மது !.....எந்த கோட்டையைப் பிடிக்க இந்த பலமான யோசனை ?''
                                     மறு கணம் அவளை நிமிர்ந்து பார்த்து சுவாரஸ்யமின்றி சிரித்தாள் மது ;
                                  ''   ம்ம்ம்....வர்ற சண்டேயை பத்தி தான் யோசிச்சுக்கிட்டிருக்கேன் !''
                                     '' அன்னிக்கு என்ன ?''
                                     '' அன்னிக்கு தாண்டி என்னைப் பெண் பாக்க வராங்க ......பையன் பேரு குமார் !.....ஊரு மதுரை ! ''
                                   '' வாவ் ...சூப்பர் !...''
                                  '' ஆனா எனக்கு இதுல துளி கூட இஷ்டம் இல்லடி !...''
                               '' ஏன்..?''
                                    ..''  ஷேகர் ன்னு ஒருத்தர்! ....கல்கத்தாவிலே  இருக்கார் ! !......அவர்  ஒரு பிசியோதேரப்பிஸ்ட் ! நான்  கல்கத்தாவிலே  இருந்த  போது அத்தைக்கு
    
' தெரப்பி ' ட்ரீட்மென்டிற்காக  அடிக்கடி அவர்  எங்க அத்தை  வீட்டுக்கு வர ......நாங்க ரெண்டு பேரும் பிரண்ட்சானோம்!....நாளடைவில் அதுவே ..காதலாய் உருவாயிடுச்சு ! .....ஷேகர் ஒரு பக்கா ஜென்ட்ல்மென் தெரியுமா!....மென் ஆப் குட் குவாளிட்டியிஸ் !....இந்த நாலு மாச பழக்கத்துல  அவரோட  நகக் கணு கூட ஏன் மேல பட்டதில்லை தெரியுமா ? .......அத்தனை டீசன்ட் !'' '
                           '' அப்பா அம்மா கிட்ட சொல்ல வேண்டியது தானே  அவரைப்  பத்தி ? '' 'கிருத்திகா இயல்பாய் கேட்டாள்;
                            ' பிரச்சனையே அங்கே தான்  ஆரம்பம் !.....ஏன்னா அவங்க ரெண்டு பேரும் ரொம்ப கண்டிப்பான பேர்வழிகள் !....அங்கே நிக்காதே ...இங்கே நிக்காதே ......சுரிதாருக்கு மேல  ..துப்பட்டா இல்லாம வெளியே போனா குத்தம் ......வெளியில போய்ட்டு கொஞ்சம் லேட்டாய் வந்தால் ஏன் லேட்டு....எதுக்கு லேட்டுன்னு  ஆயிரம் கொஸ்டின்ஸ் !.....இவளவு ஏன் !.....நான்  கல்கத்தாவிலே  எங்க அத்தை வீட்ல  இருக்கும்போது ..தினமும்  போன் பண்ணி ஜாக்கிரதியாயிறுநு ஒரு நாளைக்கு  ஆயிரம் தடவையாவது என்கூட பேசுவாங்க !.....ஹூம் ..மூச்சுக்கு முன்னூறு அட்வைஸ் !.....அநியாயத்துக்கு ரொம்ப பழமையிலே ஊறிப் போனவுங்க !.....நான் ஷேகர் விஷயத்தை அவங்ககிட்ட சொன்னா கண்டிப்பாய் எங்க வீட்ல ஒரு பூகம்பமே வெடிக்கும் !..அவங்களோட பத்தாம்பசலித்தனமான கொள்கைகளை விட்டு அவங்களும்  கண்டிப்பாய் இறங்கி வர மாட்டாங்க !......ஆனா  அவங்களுக்காக நானும் என்னோட காதலை இழக்க தயாராயில்லை !என்ன ஆனாலும் ஷேகர் தான் என்னோட கணவர் !!....நாங்க ரெண்டு பேரும் ...எங்கேயாவது கண் காணாத இடத்துக்குப் போய் கல்யாணம் பண்ணிட்டு வாழரதத் தவிர வேற வழியே தெரியலைப்பா  எனக்கு !''.......படபடவென்று பொரிந்து தள்ளியவளின் இடையே குறுக்கிட்டாள்  கிருத்திகா ;
                                       '' ரிலேக்ஸ்  மது !......ஸோ நீ அந்த ஷேகரோட ஓடிப் போர தாய் டிஸைட் பண்ணிட்டே ?...ரைட் ?..''
  ''  பட்  ...ஒரு சின்ன திருத்தம் !....என்னோட எதிர்காலத்தை நானே நிர்ணயிச்சுக்கரதாய்  டிஸைட் பண்ணிட்டேனு சொல்றது தான் கரெக்ட் !.....ஆமா .....?என்னோட மனசுக்கு பிடிச்ச வாழ்க்கையைத் தேடித் போறதுக்குப் பேர் ' ஓடிப்போரதுன்னு ' அர்த்தமா என்ன ?.......சர்டான்லி நாட் !.கிருத்தி !.....ஐ வான்ட் டு க்ளீயர் ஒன் திங் !....ஷேகர் மேல எனக்கு இருக்கற அளவுக்கதிகமான காதல்ங்கறதை விட .....என்னைப் பெத்தவங்களோட  அந்த ' டாமினேட்டிங் ' பீகேவியர் தான் என்னை இப்படி வெறுப்பாய் பேச வைக்குது  !    ... ச்சே ..காலத்துக்கேத்தார் போன்று இளைய தலை முறையினரை அனுசரிச்சுண்டு போற மனப் பக்குவம் அவங்களுக்கு துளி கூட கிடையாது !. அவங்களோட பீலிங்க்ஸ்களுக்கு  மதிப்பே தருவது கிடையாது ! ஸோ ,என்னோட இந்த  அதிரடியான முடிவு மூலம் ....என்னோட   இன்டிவிசுவாலிட்டியை  'ப்ருவ் '  பண்ணினா மாதிரியுமாச்சு !...என்னோட மனசுக்கு புடிச்ச வாழ்க்கையை நானே தேடிக்கிட்டா மாதிரியுமாச்சு !..எனக்கு இதத் தவிர வேறு வழி தெரியலைப்பா ! ''
எண்ணையில் விழுந்த கடுகாய் படபடவென்று பொரிந்தாள் மது ; மறு கணம் வாய் விட்டு சிரித்தாள் கிருத்திகா;
                              ''  கூல் மது !.......நவ்  ஐயம்  வெரி கிளியர் ! ......டு பி பிராங்க் ,  ...நீ உன்னோட பெற்றோர்களைப் பழி வாங்கரதாய் நெனச்சுக் கிட்டு உன்னை நீயே ஏமாத்திக்கரே !....அது தான் உண்மை !.யூ நோ மது !.... அவங்க உன் மீது காட்டுவது  ஆத்மார்த்தமான அன்புமா !....ஆளுமைத்தன்மை இல்லை !.. அவங்களுக்கு ...உன் மீது கரிசனமும் அக்கறையும் நிறையவே இருக்கு !...ஆனா  என்ன ஒண்ணு! ...அதுல கண்டிப்பும் , கறாரும் கொஞ்சம் துக்கலாவே இருக்கு !..வயசுப் பொண்ணு வழி தவறிப் போய் விடக் கூடாதேங்கற வாஞ்சை  நிறையவே இருக்கு !!...மது ! ...
                ......      ...உன்னோட மனசுக்குப் பிடிச்ச வாழ்க்கைத் தேடிப் போறதாய் நீ நெனைக்கிறே !....  ஆனா , இந்த ஊர் , உலகத்தோட பார்வையில் நீ '' ஓடிப்போனவள் ''தான் !....ஓடிப் போனவளோட அப்பா, அம்மாநு தான் அவங்களுக்கு பேரு ! !  அது அவங்களுக்கு எவ்வளவு பெரிய அவமானம் ?    நா தான் தெரியாம கேக்கறேன் ...தப்பு பண்றது நீ !...தண்டனை அவங்களுக்கா ?......எதற்காக அவங்களுக்கு இந்த தண்டனை ?.....உன்னை பெத்து வளர்த்து ஆளாக்கி உன் மீது  கலப்படமற்ற 'அக்மார்க் ' அன்பு செலுத்தியதற்காகவா?...அதுக்காக  ' காதல்' ங்கறது தப்பான வார்தைன்னோ ....' காதலிக்கிறது தப்பான செயல்னோ சொல்ல வரலை !.....முடிஞ்ச வரைப் போராடிப் பார்த்துட்டு .....ஜெயிக்கலைன்னா ..போராடினோம்ங்கர திருப்தியாவது கிடைக்கும் இல்லையா?........இளமை மதமதப்பில்... பின் விளைவுகளை யோசிக்காமல் நாம செய்யற காரியங்கள் பிற்பாடு நமக்கே பல இன்னல்களை உருவாக்கும் !.......இருபதுகளில் ஒரு வகை வாழ்க்கை வாழ்ந்துட்டு அப்புறம் அறுபதுகளில் அதை நெனச்சு வருத்தப் படருதுல எந்த பிரயோஜனமும் இல்லை !  மது !...பாசிட்டீவாய்  திங்க்...பண்ணுப்பா !.உங்க அப்பா ,அம்மா கிட்ட மனம் விட்டு பேசு !.....கண்டிப்பாய் ஒரு நல்ல வழி பிறக்கும்..எதுவுமே நாம அப்ப்ரோச் பண்ற விதத்தில தாம்ப்பா இருக்கு !.''
..கிருத்திகா சொன்ன ஒவ்வொரு  வார்த்தையும் , மதுவின் மனதில்  பம்பரமாய்ச் சுற்றி சுற்றி சுழன்று கொண்டிருக்க .....ஒரு விதத்தில் அவள் கூறுவது நியாயம் என்று கூட பட்டது அவளுக்கு; அப்போது சிவராமிடமிருந்து போன் வரவே இருவரும் வீட்டை நோக்கி கிளம்பினார்கள்.
                     
            ன்று வெள்ளிக்கிழமை ;  பகல் சாப்பாட்டிற்கு பின் டி.வி சீரியலுடன் ஒன்றிப் போயிருந்த கிருத்திகா, செல்போனின் அலறலுக்கு செவி சாய்க்கும் விதமாய் அதனை எடுத்து காதில் பொருத்திக் கொண்டாள் ; மறு முனையில் மதுவின்  அட்டகாசமான குரல் !
                                                  '' ஹாய் டீச்சரம்மா .....வர்ற சண்டே என்னை பொண்ணு பாக்க வராங்க !....நீயும் என் கூட இருக்கணும் !''
                                                      ''ஷ்யூர் .!...'' சந்தோஷமாய் சொன்னாள் கிருத்திகா ;
                                                '' பையன் யாருன்னு கேக்கலியே நீ ?''
                                                 '' வேற யாரு ?....உன்னோட  அந்த கல்கத்தா ஹீரோ  ஷேகர் தானே !?''.....
                                 ''  நோ ...... குமார் !......அந்த மதுரைப் பையன் !'' மது சாவதானமாய் சொல்ல ......கிருத்திகாவுக்குள் ஆச்சரியமும் படபடப்பும் !
                                 '' என்ன சொல்றே ?  ஆர் யூ சீரியஸ் ?''
                           ''   யா ......டேம் சீரியஸ் !.....கிருத்தி !.. இந்த நாலு நாளிலே என்னோட வாழ்க்கையிலே எவ்வளவு மாற்றங்கள்!....எஸ் ..அதுக்கு நீதான் காரணம் !''
                                  '' ப்ளீஸ் ! என்னால தாங்க முடியலை !
புரியும்படியாய் சொல்லு '' ...
                                     '' சொல்றேன் ! ....உன்னை மீட் பண்ணிட்டு வந்த வுடன் அப்பா , அம்மாகிட்ட .ஷேகர் பத்தியும்.., அவன் மீது எனக்கிருக்கும் லவ்வைப் பத்தியும் சொன்னேன் !.....உடனே பூகம்பம் வெடிச்சது எங்க வீட்ல !....கடுமையாய் போராடினதுல ...ஒரு வழியாய் சேகரை ஏத்துக்கிட்டாங்க !..அப்பா ..அவனைப் பற்றி  கல்கத்தாவில இருக்கும் எங்க அத்தை கிட்ட விசாரித்ததுல அவன் ஏற்கனவே கல்யாணம் ஆனவங்கர விஷயம் தெரிய வந்தது !. ஸோ. அவன் என்னை ஏமாத்த நெனச்சிருக்கான் !...ராஸ்கல் !.....தேங்க் காட் !.....கிருத்தி !.....அப்பா, அம்மாவைப் பத்தி ' நெகட்டிவாய்' திங்க் பண்ணி ..கடைசியில என்னோட  வாழ்க்கையை   ' நெகட்டிவ்வாக்கிக்க  தெரிஞ்சேன் !.....நல்ல வேலை !,.....உன் மூலம் அந்த ஆண்டவன் என்னைக் காப்பாத்தினான் !! .''....
மனம் நெகிழ்ந்து போய் அவள் சொல்ல ...கிருத்திகாவின் மனமும் இப்போது பூரிப்பில் நிறைந்து போனது !....

                                                                                                                                                                                                                                         தங்கம்கிருஷ்ணமுர்த்தி .......லண்டன்
 
                           


.

Saturday 19 February 2011

எங்கிருந்தோ வந்தாள்.........

                                                  எங்கிருந்தோ வந்தாள் ......
'' தியாகராஜா .......தியாகராஜா......''
அப்போது தான் போஜனத்தை முடித்து அடுக்களையை சுத்தம் செய்து கொண்டிருந்த கமலாம்பாள் , வெளி வாசலிலிருந்து வந்த குரல் கேட்டு , அங்கிருந்து வெளியேறி அதிவேகமாக முன்கூடத்தைக் கடந்து வாசலையடைந்தாள் ;
எதிரே ................................

 ஐந்தே முக்காலடி உயரத்திற்கு ஆஜானுபாகுவாய் , சிவந்த நிறத்துடன் நெற்றியில் குங்குமமும் , சந்தனமும் தரித்து ,  தலை நிறைய பூவுமாய் சிரித்த முகத்துட ன்கம்பீரமாய்  நின்றிருந்த அந்த பெண்மணியைக் கண்டதும் பிரமிப்பும் , இனம் புரியாத மரியாதையும் அவளுள் ஏற்பட .......எதுவும் பேசாமல் அந்த பெண்மணியையே உற்றுப் பார்த்தாள் கமலாம்பாள் ;கருணையும் , அன்பும் கலந்த அந்த கண்களில் தெரிந்த ஒளி அவளை என்னவோ செய்தது ; 
                                                                                                          '' இது தியாகராஜன் வீடு தானே ? '' குரலும் அவளைப் போன்றே கம்பீரமாய் இருந்தது ; சட்டென்று தன்னை சுதாரித்துக் கொண்ட கமலாம்பாள் , புருவம் முடிச்சிட வியப்புடன் , ;
                                                                                                          '' ஆம் ....நீங்கள் யார் ? ''என்றாள் குழப்பத்தோடு ;     ;
                                                                                                          '' என் பெயர் தர்மசம்வர்த்தினி !.......எனக்கு இந்த ஊர் தான் .....உன் கணவன் தியாகராஜனுக்கு என்னை நன்றாகத் தெரியும் !.....'' புன்னகையுடன் பேசியவளை திகைப்புடன் ஏறிட்ட கமலாம்பாள் , பின் மெல்லிய குரலில் , 
                                                                                                             '' சரி .....உள்ளே வாருங்கள்
 ..                                                                      புன்னகை மாறாத முகத்துடன் தலையை ஒரு பக்கமாய் சாய்த்தவாறே அப் பெண்மணி உள்ளே நுழைய ................
கமலாம்பாள் அவள் அமர்வதற்காக சிறு பாயைப் போட்டாள் ;அதில் சம்மணமிட்டு அமர்ந்து கொண்ட அப் பெண்மணி , சுற்றுமுற்றும் பார்வையை சுழலவிட்டாள் ; வீட்டில் நிசப்தத்தைத் தவிர வேறு சப்தமில்லை ! திறந்த முற்றமும் , அதைத் தாண்டி ஒரு சிறிய அறையும் , பூஜையறையுமாக வீடு நீளவாக்கில் அமைந்திருந்தது ;                                                                           '' தியாகராஜனுக்கு உடல் நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டேன் .....................இப்போது எப்படியிருக்கிறான் ?''
சுவரில் சாய்ந்து நின்றிருந்த கமலாம்பாளுக்கு அப் பெண்மணியின் வார்த்தைகள் கேட்டு , தூக்கி வாரிப் போட்டது !.....
                                                                                '' என்..ன ............ ?.......என் கணவருக்கு உடம்பு சுகமில்லை என்கிற சமாச்சாரம் உங்களுக்கு எப்படி தெரியும் ? ''கன்னத்தில் கை வைத்து அதிசயித்தவளுக்கு  ஒற்றை வார்த்தையில் பதிலளித்தாள் அந்த பெண்மணி ;

                                                                 '' ராமுடு சொன்னான் !.''
                                                                '' ராமுடுவா ?''
                                                              '' ஆம் ....ராமுடு தான் ...அடிக்கடி உங்கள் இல்லத்துக்கு வந்து போகும் அவன் , ...உன் கணவனுக்கு நன்கு பரிச்சயமானவன் .!...எனக்கு அவன் சகோதரனும் கூட '' 
                                                                ''அப்படியா ?  ஆச்சரியமாக இருக்கிறதே ?.நீங்கள் குறிப்பிடும் அந்த நபரை நான் பார்த்ததே கிடையாதே ? ''கன்னத்தில் கை வைத்து அதிசயித்தாள் கமலாம்பாள் ; 
                                                                  '' ............ !....'' ஆனால் தியாகராஜனுக்கு , ராமுடுவைப் பார்க்காமல் அரைக் கணம் கூட இருக்க முடியாது !..என் சகோதரன் ராமுடுவும் அப்படியே !...''புன்னகையுடன் அவள் கூற , இப்போது கமலாம்பாளின் வியப்பு இரட்டிப்பாகியது ; 
                                                                                         '' என்ன சொல்கிறீர்கள் ?...''
                                                                                        '' அந்த அளவுக்கு இருவரும் நெருக்கமானவர்கள் என்கிறேன் !.உன் கணவனுக்கு உடம்பு சுகமில்லை என்று என்னிடம் சொல்லி மாய்ந்து போய்விட்டான் ராமுடு !'' என்றவள் அப்போது தான் நினைவு வந்தவளாய் , கண்கள் மின்ன , 
'' .அவன் கூறியதன் பேரில் இதோ இந்த மருந்தைத் தயார்
 
 செய்து கொண்டு வந்தேன் ......!...இதை அவனுக்குக் கொடு !,.....கண்டிப்பாகப் பலன் கிட்டும் !...''
அவளின் குரலில் தெரிந்த ஏதோ ஒரு உணர்வு , கமலாம்பாளைத் திடப் படுத்த , ' சட்டென்று ' அவளிடமிருந்து அந்த சிறு பையைப் பெற்றுக் கொண்டாள் அவள் ;
                                                                                                   '' மிக்க நன்றி .......உங்களுக்குத் தான் எத்தனைக் கரிசனம் என் கணவர் மீது ''
நெகிழ்ச்சியுடன் கூறினாள் கமலாம்பாள் ; 
                                                                                                    '' சரிதான் .......என் சகோதரன் ராமுடுவின் மீது உன் கணவன் தியாகராஜன் கொண்டிருக்கும் கரிசனத்தையும் , அன்பையும் விடவா ?'' ' பளிச்' சென்று சிரித்தவாறே , அந்த பெண்மணி பின் கைகளைத் தரையில் ஊன்றி அவசரமாய்  எழுந்து கொண்டவள் , பின் , தனக்கேயுரிய  கம்பீரமான குரலில் ,   
                                                                                                                                                             '' நான் கிளம்புகிறேன் !......எனக்காக ஏகப்பட்ட பேர் காத்துக் கொண்டிருப்பார்கள் !  நிறைய வேலைஇருக்கிறது ...'' பரபரப்புடன் உள்ளறயை ஒட்டி அமைந்துள்ள அந்த சின்னஞ்சிறு பூஜையறைக்குச் சென்று அங்கு சீதா, லட்சுமண , பரத , சத்ருக்ன , அனுமத் சமேதராய் பட்டாபிஷேகத் திருக்கோலத்தில்  வீற்றிருக்கும் ஸ்ரீ ராமச்சந்திரமுர்த்தியை வணங்கி மின்னல் வேகத்தில் மறைந்து போனாள் !!!  ..............................
                                                                                                                                                                    எலும்பும், தோலுமாய் உருக்குலைந்து கிழித்த நாராய் படுத்துக் கிடந்த தியாகராஜர் ,  புயலாய்த்   தன்னைக் கடந்து சென்ற அந்த பெண்மணியின் முக லாவண்யத்தைக் கண்டு ஏகத்துக்கு கலவரமானார் ;...............'குப்' பென்றதோர் உணர்வு ரோமக்காலின் வழியே உள் புகுவது போலிருக்க ................சிந்தைத் தடுமாற மெல்ல கட்டிலிலிருந்து எழுந்து கொண்டவரின் கால்கள் 
அனிச்சையாய் வாசலை நோக்கி நடக்க ஆரம்பிக்க ....கண்களோ பரபரப்புடன் அந்த பெண்மணியைத் தேட ஆரம்பித்தன !.
கண நேரத்தில் அவர் மனதில் ஆயிரமாயிரம் எண்ண அலைகள் தோன்றித் தோன்றி மறைந்து கொண்டிருந்தன ;
                                                                                           ' இவள் சீதா தேவியோ ?'
                                                                                                                       '' சுவாமி ......''
             முதுகுக்குப் பின்னால் வந்த குரல் கேட்டுச் சட்டென்று திரும்பினார் தியாகராஜர் ; 
எதிரே கஷாயக் கோப்பையுடன் கமலாம்பாள் !
                                                                                             '' ஏன் இங்கு நிற்கிறீர்கள் ?.....' யாரைத் தேடுகிறீர்கள் '' 
கோப்பையை நீட்டியவாறே கேட்டவளை பதட்டத்துடன் ஏறிட்டார் தியாகராஜர் ; 
                                                                                            '' அந்த பெண்மணியைத் தான் .....'' ஏனோ அதற்கு மேல் பேச நா எழவில்லை அவருக்கு ;
........................................................................................... '' இதோ பாருங்கள் ......உடல் அனலாய் கொதிக்கிறது உங்களுக்கு !...முதலில் இந்த கஷாயத்தைக் குடியுங்கள் ''?''
காய்ச்சலின் காரணாமாக உடல் ஏகத்துக்கு பலவீனப்பட்டுப்போயிருந்ததால் சுரத்தின்றி அவளுக்கு பதிலளித்தார் ;
                                                                                             '' கமலா... நான் கூறுவதைச் சற்றுப் பொறுமையாகக் கேள் !.....ராம நாமத்தை மனதிலே தியானித்துக் கொண்டிருந்தவன் ஒரு கட்டத்தில் என்னையுமறியாமல் உறங்கி விட்டேன் !......ஆனால் ஏதோ ஒரு உந்துதலின் பேரில் சற்று முன்பு  விழித்துக் கொண்டபோது பூஜையறையிலிருந்து ஒரு கம்பீரமான பெண்மணி என்னைக் கடந்து சென்ற காட்சி என் கண்களுக்கு மங்கலாகத் தெரிந்தது !..........அதை ஊர்ஜிதம் செய்து கொள்ளும் பொருட்டே இங்கு வந்தேன் !.......கமலா.... தயவு செய்து சொல் ....நம் வீட்டுக்குள்ளிருந்து சென்ற அந்த பெண்மணி யார் ?....''
கெஞ்சுகிற தொனியில் பேசிய அவருக்கு இயல்பாய் பதிலளித்தாள் கமலாம்பாள் ;
                                                                                           ...'' உங்கள் சிநேகிதர் ராமுடுவின் சகோதரி ''
                                                                                             '' ராமுடுவா ?'' குழப்பத்துடன் ஏறிட்டார் தியாகராஜர் ;
                                                                                              '' ஆம் ....அப்படித்தான் சொன்னாள் அந்த பெண்மணி ''
                                                                                            ''  கமலா ...எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது !....''
                                  மறு கணம் நிதானமாக பேச ஆரம்பித்தாள் கமலாம்பாள் ;
                                                                                                  '' சுவாமி ....வீண் குழப்பம் வேண்டாம் ......உங்கள் சிநேகிதர் ராமுடு மூலம் உங்களுக்கு உடல் நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டதும் உடனடியாய் உங்களுக்காக ஒரு மருந்தை தயாரித்து நம் இல்லத்துக்கு வந்து விட்டாள் அவரது சகோதரி !.....இப்போது தான் புறப்பட்டுச் சென்றாள் .......அவள் கொடுத்த மருந்துப்பொடியில் தான் இந்த கஷாயத்தை தயாரித்தேன் !........உங்கள் சிநேகிதர் ராமுடுவுக்கும் , அவரது சகோதரிக்கும் தான் உங்கள் மீது எத்தனை பாசமும் , பரிவும் !...''
குரல் கம்ம , மனம் நெகிழ்ந்து போய் பேசியவளிடம் இப்போது சாவதானமாகக் கேட்டார் தியாகராஜர் ;
                                                                                                   '' கமலா....அந்த பெண்மணியின் பெயரைக் கேட்டாயா ?''
மறு கணம் சொடுக்கு போட்டாற்போல பதில் வந்தது கமலாம்பாளிடமிருந்து ;
.............................................................................................''.தர்மசம்வர்தனியாம்......பேச்சுவாக்கில் சொன்னாள் ''
                                                                                           பெயரைக் கேட்டதும் தியாகராஜரின் மூளையில் ' பளிச்'சென்று ஒரு எண்ணம் ! இப்போது சகலமும் புரிந்து போயிற்று அவருக்கு !

நா தழுதழுக்க , மெய் சிலிர்க்க , கரங்களை சிரத்தின் மீது உயர்த்தி , 
                                                     '' அம்மா ...தாயே .....தர்மசம்வர்த்தினி ....உன் கருணையே கருணை ..............இந்த சிறியேன் மீது கருணைக் கொண்டு தாயுள்ளத்துடன் எனக்காக மருந்து கொண்டு வந்தாயே !.....நான் பரம பாக்கியசாலி ........என் பார்யாள் கமலா என்னை விட பாக்கியசாலி ........உன்னைத் தரிசிக்கும் பாக்கியம் 
பெற்றாளே !.......உன்னைப் போன்ற இரக்கமுடைய தாயை எங்கும் காணேன் !....''
கண்களிலே ஆனந்தக் கண்ணீர் பெருகியோட பக்தியின் பெருக்கிலே அனலிடை மெழுகாய் உருகி நின்றார் அவர் ! 
                                     '' அம்ம தர்மசம்வர்தனி                                      யாதுகோவம்ம மா                                     இம் மஹினி நீசறிஎவரம்மா
சிவுனிகொம்ம மா ''
மனமுருகிப் பாடியவரைப் பிரமிப்புடன் நோக்கினாள் கமலாம்பாள் !
பின் பூஜையறைக்கு ஓடோடிச் சென்ற தியாகராஜர் , கண்ணீர் மல்க , 
                                                              '' ஹே ராமா .......தசரதக்குமாரா .......ஜானகி மணாளா .......உன்னைத் தவிர வேறு தெய்வங்களைப் பூஜிப்பதில்லை , மனத்தால் நினைப்பதுமில்லை என்கிற திட சித்தத்துடன் வாழ்ந்து வந்த எனக்கு , நீயே உனது பக்தர்களுக்கு பல்வேறு தெய்வங்களின் வடிவில் வந்து அருள் புரியக் கூடியவன் என்கிற உண்மையை , நான் உணர்ந்து தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே இப்படியொரு லீலையைப் புரிந்தாயோ ?....என்னே உன் கருணை ....''
இந்த சம்பவத்துக்குப் பின் தியாகராஜர் , ராம பக்தர்களிடம் எல்லா தெய்வங்களும் கருணை செயவாரகலேன்றும் ,ராம பக்தனுக்கு எல்லாம் ராம மயமேதானென்றும் தீர்மானித்து அனைத்து தெய்வங்கள் குறித்தும் பாடலானார் !!

உருத்திராக்கம் .............

                                                                                                                           
ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி துணை 
உருத்திராக்கம் 

சிவநெறி நிற்போர் அணியும் ஆபரணங்களுள் மிக முக்கியமானதாகத் திகழ்வது "உருத்திராக்கம் '' ஆகும் ; இதனைத் தனித்தும் , மாலையாகக் கோர்த்தும் அணிவர் ; 
                           உருத்திராக்கம் என்பது ஒரு வகை மரத்தின் விதையாகும் !இமயமலைச் சாரலிலும் , நேபாளத்திலும்இம் மரங்கள்  பரவலாகக் காணப்படுகின்றன ; 
இம் மரத்தின் விதைகள் மிளகின் அளவு முதல் , எலுமிச்சம்பழ அளவு வரை கிடைக்கின்றன ; வெகு அபூர்வமாக தேங்காய் அளவு கூட சிற்சில இடங்களில் விளைகின்றன ; நன்கு பழுத்த உருத்திராக்கப் பழத்திலிருந்து கொட்டைகள் சேகரிக்கப் படுகின்றன ; 
                            உருத்திராக்கன்களைக் கோர்த்த மாலைகள் , தாழ் வடம் , அக்கவடம் , அட்சமாலை, மற்றும் கண்டிகை என்று பலவாறாகக் கூறப் படும் ; 
சிவன் , பிரம்மாவிடமிருந்து பல அரிய வரங்களைப் பெற்றிருந்த மாயன் , கமலாட்ஷன் மற்றும் வித்யுன்மாலி முதலான அசுரர்கள் ,........முறையே தங்கம் , வெள்ளி இரும்பு முதலான தங்கள் கோட்டைகளில் இருந்து கொண்டு தேவர்களுக்கும் , ஏனையோருக்கும் தாங்கொணா துன்பம் அளித்தனர் ; பொறுக்க முடியாத தேவர்கள்  , தங்களைக் காத்து அருளும்படி இறைவனிடம் இறைஞ்ச ..........பெருமானும் மனமிரங்கி அசுரர்களின் மூன்று கோட்டைகளையும் தமது சினம் கொண்ட சிரிப்பினால் எரித்தார் !!........கோபத்தில் விழித்துச் சிவந்த பெருமானின் மூன்று கண்களினின்று வியர்வைத்துளிகள் அரும்பின !....அவ் வியர்வைத் துளிகள் மண்ணில் விழுந்து மரங்களாயின !.....;; உருத்திரனின் வியர்வைத் துளிகளிலே அம் மரங்கள் தோன்றியதால் , '' உருத்திராக்க மரங்கள் '' என்றே அவை அழைக்கப் பட்டன ! 
                                                                   ஆக , உருத்திராக்கம் என்பது '', சிவனின் கண்கள் '' என்பது பொருள் ; மூன்று கண்களிலிருந்து விழுந்த வியர்வைத் 
துளிகளுக்கேற்ப மூன்று வகையான மரங்கள் முளைத்தன ! வலது கண்ணான சூரிய விழியிலிருந்து தோன்றிய பன்னிரண்டு துளிகள் , செந்நிறமாகவும்  
இடது கண்ணான சந்திர விழியிலிருந்து தோன்றிய பதினாறு துளிகள் வெண்ணிறமாகவும் , நெற்றிக்கண்ணிலிருந்து ( அகனிக்கன் )தோன்றிய பத்துத் துளிகள் கரு நிறமாகவும் விளங்குவதால் , இன்று உருத்திராக்கம் முப்பத்து எட்டு வகையாக விளங்குகின்றதென்பர்!
                                                   உருத்திராக்கத்தில் இயற்கையாகவே அமைந்த த்துளையான நாளமும் , முகங்கள் என்கிற அழுத்தமான 
நெடுக்குக் கோடுகளும் , மேடும் பள்ளமுமான ' கேசரங்கள் ' எனும் பகுதியும் அமைந்துள்ளன ; இவற்றில் முகங்கள் , சிவனையும் துளை , விஷ்ணுவையும் , 
கீழ்ப் பகுதி பிரம்மனையும் , மற்றும் கேசரங்கள் எனும் முள்ளுமுள்ளான பகுதி அனைத்து தேவர்களையும் குறிப்பதாகும் !
                                                        உருத்திராக்கத்தில் ஒரு முகம் கொண்டவை சிவபெருமானையும் , 
                                                        இரு முகம் கொண்டவை சிவசக்தியையும் ,
                                                         மூன்று முகம் கொண்டவை அக்னியையும் , 
                                                      நான்கு முகம் கொண்டவை பிரமனையும் , 
                                                    ஐந்து முகம் கொண்டவை காலாக்னி ருத்ரரையும் , 
                                                      ஆறு முகம் கொண்டவை குமரனையும் 
                                                     ஏழு முகம் கொண்டவை சப்தமாதர்களையும் , 
                                                     எண்முகம் கொண்டவை விநாயகரையும் , 
                                                    ஒன்பது முகம் கொண்டவை கங்கை முதலான நவதீர்த்தங்கள் மற்றும் வைரவரையும் , 
                                                  பத்து முகம் கொண்டவை தசதிக்பாலகர்களையும் , 
                                              பதினோரு முகம் கொண்டவை ஏகாத்சருத்திரர்களையும்,, 
                                                பன்னிரண்டு முகம் கொண்டவை பன்னிரு ஆதித்யர்கள் , மற்றும் திருமாலின் மந்திரமூர்த்திகளையும் , 
                                                பதிமூன்று முகம் கொண்டவை , நூறு உருத்திரர்களையும் , 
                                               பதினான்கு முகம் கொண்டவை அச்வினித்தேவர்கள் மற்றும் அஷ்டவசுக்கள் ஆகியோரையும் 
                                           பதினைந்து முகம் கொண்டவை சந்திரனையும் , 
                                              பதினாறு முகம் கொண்டவை முப்பத்துமுக்கோடி தேவர்கள் ஆகியோரையும் அதி தேவதையாகக் கொண்டவை !!
இவற்றை அணிவதால் அவையவைக்குரிய தேவதைகள் மகிழ்ந்து அருள் புரிகிறார்கள் ; 
                                       முப்பத்தியாறு , ஐம்பத்திநான்கு , நூற்றெட்டு ஆகிய எண்ணிக்கையில் இவ் வுத்திராக்க மணிகளைக் கோர்த்து மாலையாக்கி தலையிலும் , கழுத்திலும் அணிவர் ; 
                                                       பொதுவாக ஐந்து முகமுள்ள உருத்திராக்கங்கள் , பெருமளவில் கிடைக்கின்றன ; ஒரு முகம் உள்ள உருத்திராக்கம் அரிதாகவே 
கிடைக்கின்றன ; சிவபூசையாளர்கள் , ஐந்து அல்லது பதினோரு முகம் கொண்ட மணிவடத்தையே அணிகின்றனர் ; 
இரட்டை வாழைப்பழம் போன்று ஒன்றோடொன்று ஒட்டி விளைந்த இரட்டை உருத்திராக்கங்கள் கிடைக்கின்றன ; இவற்றை '' கவுரி சங்கரம் '' என்பர் ; 
                                    தஞ்சை மாவட்டத்திலுள்ள கொட்டையூர் எனும் தலத்து மூலவரான லிங்கமூர்த்தி, உருத்திராக்கம் போன்ற திரு மேனியை உடையவராக விளங்குகின்றார் என்பர் ; 
தென்னகத்தில் உருத்திராக்க மரங்கள் பயிராவதில்லை என்றாலும் வெகு அபூர்வமாக '' கூவம் '' என்று அழைக்கப் படும் திருவிற்கோலம் திருத்தலத்தில் 
உருத்திராக்க மரம் உள்ளது ; இம் மரம் சித்திரை மாதத்தில் காய் காய்க்கின்றது என்பர் ! 

சோமசூக்தப்பிரதட்சணம்................

பிரதோஷ நாளில் , சிவாலயத்தை வலம் வரும் முறைக்கு ''  சோமசூக்தப்பிரதட்சணம் '' என்று பெயர் ;
                                                         முதலில் நந்தி தேவரைத் தரிசனம் செய்து ...........அங்கிருந்து இடப் புறமாகச் சென்று சண்டீஸ்வரரைத் தரிசனம் செய்து ...............
பின் , சென்ற வழியே திரும்பி வந்து ......நந்தி தேவரை மீண்டும் தரிசனம் செய்து .................வலமாகச் சென்று '' கோமுக் '' எனப்படும் .பெருமானின் அபிஷேக நீர் வரும் துவார வழியை தரிசித்து ....சென்ற வழியே திரும்பி வந்து நந்தி தேவரை மீண்டும் தரிசித்து ........பின் இடமாகச் சென்று சண்டீஸ்வரரைத் தரிசித்து ........சென்ற வழியே திரும்பி வந்து நந்தி தேவரைத் தரிசனம் செய்யாமல் , வலப் புறமாகச் சென்று '' கோமுக்''கை தரிசித்து விட்டு மீண்டும் வந்த வழியே திரும்பி வந்து நந்தி தேவரை தரிசியாது .......இடப் புறமாகச் சென்று சண்டீஸ்வரைத்  தரிசனம் செய்து ......சென்ற வழியே திரும்பி வந்து நந்தி தேவரை தரிசனம் செய்து ,,...........................அதன் பின்னரே சிவலிங்கத்தை தரிசித்தல் வேண்டும் !
                                                                                 இந்த '' சோமசூக்தபிரதட்சிநத்திற்குப் '' பிறகு , தன்னைத்தானே ஒரு முறை சுற்றிக்  கொள்ளல் வேண்டும் ! இந்த '' ஆத்மப் பிரதட்சினமானது , ஆத்ம
 லிங்கத்துக்கே '' சோமசூக்தப்பிரதட்சிணம் '' செய்வதற்கு ஒப்பாகும் !
                                                                                   ஆலகால விஷத்தால் தாக்குண்ட தேவர்கள் , இடமும் , வலமுமாக ..திசை புரியாது அஞ்சி ஓடிய நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் அமைந்த இந்த '' சோமசூக்தபிரதட்சினத்தை '' பிரதோஷ நாளில் செய்தால் அனந்த கோடி பலன் தரும் !

எமனை மடக்கிய சாவித்திரியின் சாதுர்யம்................

௨ 
                                    ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி துணை ( மார்ச் 14
       எமனை மடக்கிய சாவித்ரியின் சாதுர்யம் ( காரடையான் நோன்பு தொடர்பான கட்டுரை )
       மாசியும் , பங்குனியும் கூடும் நேரத்தில் மங்கையர்களால் கடை பிடிக்கப்படும் வெகு அபூர்வமான  விரதமிது ! மஞ்சள் , குங்குமத்தோடு தாலி பாக்கியத்துடன்.  தீர்க்க சுமங்கலிகளாக தாங்கள் வாழ வேண்டுமென்று உமா தேவியாரைக் குறித்து பெண்கள் பிரார்த்திப்பதாக ஐதீகம் ; 
                                                                                                     எமனிடமிருந்து தன கணவனை மீட்ட சாவித்ரியின் கதையின் அடிப்படையில் மாங்கல்ய பாக்கியம் வேண்டி சுமங்கலி  பெண்கள் அனுஷ்டிக்கும் விரதமிது ; இதில் எமனோடு சாவித்திரி நடத்திய சாதுர்யமான விவாதங்கள் , ஒவ்வொருவரும் அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் ............................

                                                                                       
                                                                         '' ஐயனே ...தேவனைப் போல் தோற்றமளிக்கும் தாங்கள் யார் ?''
மார்பிலே வாடாத மாலையோடும் , கையிலே தண்டம் , பாசக்கயிற்றையும் பிடித்தவாறு தன்னருகே நின்று கொண்டிருக்கும் அந்த கரிய ஆடவனைப் பார்த்து கலக்கத்துடன் கேட்டாள் சாவித்திரி ; பதிலுக்கு அந்த ஆடவன் , வெகு சாவதானமாய் , 
                                                                         '' பெண்ணே ! நான் எமன் !.......நீ பதிவிரதையாக இருப்பதாலேயே நான் உன் கண்களுக்குத் தெரிவதோடு பேசவும் செய்கிறேன் !....உன் கணவன் சத்யவானின் ஆயுள் முடிந்து விட்டபடியால் , நான் என் கடமையை நிறைவேற்ற வந்துள்ளேன் !........பொதுவாக மனிதர்களைக் கொண்டு செல்ல எனது தூதர்கள் தான் வருவார்கள் !.......உன் கணவன் சத்யவான் , சிறந்த தர்மவான் ...........குணக்கடல் .........அதனால் தான் நானே நேரில் வந்தேன் !'' 
பேசியவாறே , சாவித்ரியின் மடியில் தலை சாய்த்துப் படுத்துக் கிடந்த சத்யவானின் உயிரை தன் பாசக் கயிற்றால் பற்றியிழுத்தான் எமன் ; 
மறு கணம் சத்யவானின் உயிர் பிரிந்து , உடல் அசைவற்றதாகி அங்கேயே கிடக்க ...............உயிரற்ற அந்த உடலை எடுத்துக் கொண்டு தெற்கு திசையை நோக்கி செல்ல ஆரம்பித்தான் எமன் ;                                           நியமத்தாலும் , விரதத்தாலும் பல சித்திகள் பெற்றிருந்த சாவித்திரி , கணவனின் உயிரைப் பின் தொடர்ந்து 
செல்ல துவங்கினாள் ; அதனைக் கண்ட எமன் , 
                                                                                        '' பெண்ணே ......ஏன் என்னைப் பின்தொடர்கிறாய் ?...........திரும்பிப் போ !.....உன் கணவனுக்குச் செய்ய வேண்டிய ஈமச் சடங்குகளை முறைப்படி  செய் !...'' ...என்றான் ; 
                                                                        ......................................................................' தர்ம பிரபுவே !....பெரியோர்களின் தரிசனம் கிட்டியவர்களுக்கு , எத் துன்பமும் நேரிடாது என்கிற வேதவாக்கு என் விஷயத்தில் பொய்த்து போய்விடும் போலிருக்கிறதே ........நெறி தவறாது தர்மத்தைக் காப்பவரான தங்களை தரிசித்தும் கூட , எனக்கு கைம்பெண்ணாகும் நிலைமை உண்டாகப் போகிறதே !...............ஐயனே ........எனக்கேற்படப் போகும் துன்பம் , வேத வாக்கைப் பொய்த்து விடச் செய்து விடும் '' 
தர்மத்தின் ஆணிவேர் போன்ற இக் கருத்துக்களை அவள் சொன்னதும் பெரு மகிழ்வு கொண்ட எமன் அவளை நோக்கி , 
                                                                            '' பெண்ணே .......உன் இனிமையான சொற்களால் என் மனம் மகிழ்ச்சி கொள்கிறது ............அதன் காரணமாக உனக்கு வரம் அளிக்கவும் விரும்புகிறேன் !.....எது வேண்டுமானாலும் கேள் ....உன் கணவனின் உயிரைத் தவிர !......''
                                                                         '' தர்ம தேவதையே ......என் மாமனார் தன கண்களை இழந்ததால் , நாட்டை இழந்து கானகத்தில் வசித்து வருகிறார் .......
எனவே அவர் மீண்டும் கண் பார்வை அடைவதோடு , சூரியனுக்கு ஒப்பான பலம் மிக்கவராகவும் திகழ வேண்டும் !'' 
                                                                         '' தந்தேன் !........திரும்பிச் சென்று விடு !....''
                                                                         '' கருணைக் கடலே !....கணவனுக்கு அருகில் இருப்பதையே என் மனது பெரிதும் விரும்புகிறது !.........அவருடன் செல்வதே எனக்கு ருசிக்கிறது !........நான் சொல்வதைத் தொடர்ந்து கேட்பீராக ......சாதுக்களுடைய நட்பு என்றைக்கும் வீணாகாது .....எனவே சாதுக்களுடைய கூட்டத்துடனேயே வசிக்க வேண்டும் !'' 
                                                                   '' அறிவிர்சிறந்தவளே !.......பண்டிதர்களின் அறிவை மேம்படுத்தக் கூடிய வகையில் நீ கூறிய இச் சொற்கள் , என் மனதிற்கு இனிமையைத் தருகிறது !......உனக்கு மேலும் ஒரு வரம் தர விரும்புகிறேன் ......எதுவாயினும் கேள் .....உன் கணவனின் உயிரைத் தவிர !...''
                                                                 ''தர்மசீலரே ...என் மாமனாரின் நாட்டை பகைவர்கள் கவர்ந்து கொண்டனர் !.......அந்நாட்டை அவர் மீண்டும் அடைய வேண்டும் !...''
                                                                     '' அவ்வண்ணமே தந்தருளினோம் !.....இனி நீ திரும்பிச் செல் ..''
                                                                   '' பெருமானே ......உங்களைப் போன்ற சாதுக்கள் மட்டுமே பகைவர்களிடமும் கருணைப் புரிகிறார்கள் .....இவ் வுலகின் இயற்கையான நியதி இது !...''
                                                                  '' பெண்ணே ....தாகம் கொண்ட மனிதனுக்கு தண்ணீர் கிட்டியது போலிருக்கிறது உனது இந்த தேன் போன்ற இனிய சொற்கள் !....மூன்றாவதாய் உனக்கு ஒரு வரத்தையளிக்க விரும்புகிறேன் ......கேள் ....உன் கணவனின் உயிரைத் தவிர ...''
...................................................................'' வள்ளலே ....என் தந்தையார் அஸ்வபதி ஆண் வாரிசு இல்லாமல் துன்புறுகிறார் ........எனவே அவருக்கு அழகும் , அறிவும் , 
ஆற்றலும் , ஆயுளும்  மிக்க ஆண் பிள்ளைகள் பிறக்க வேண்டும் !...''
                                                                     '' தந்தோம் ........நெடுந்தூரம் வந்து விட்டாய் ......இனி நீ திரும்பிச் செல் !....'' 
                                                                     '' ஐயனே ..கணவன் அருகிலிருப்பதால் எனக்கு தூரம் தோன்றவில்லை ........சிரமம் தெரியவில்லை .......சூரிய புத்திரரான தாங்கள் ஏற்றத்தாழ்வுக்கு இடமின்றி நடுநிலையான ஆட்சி நடத்துவதாலேயே '' தர்மராஜா '' என்றழைக்கப்படுகிரீர் !.......ஒரு மனிதனுக்கு சாதுக்களிடம் 
உண்டாவது போன்ற நம்பிக்கையை அவன் தன்னிடத்தே கூட கொள்வதில்லை !.....அனைவரும் தங்களைப் போன்ற சாதுக்களின் நட்பையே பெரிதும் விரும்புகின்றனர் !....''
                                                 
                                                                                    ''  குணமேம்பாடுடையவளே ......நீ கூறியது போன்ற உயர்ந்த வார்த்தைகளை இதற்கு முன்பு யாரிடமும் நான் கேட்டதில்லை!......என் மகிழ்வின் பொருட்டு நான்காவது வரத்தையும் உனக்கு அளிக்க விரும்புகிறேன் ......கேள் ......உன் கணவனின் உயிரைத் தவிர !...''
                                                                                    '' பெருமானே .....எனக்கும் , சத்தியவானுக்கும் குலத்தை மேம்படுத்தும் பொருட்டு பலமும் , சக்தியும் , ஆற்றலும் ,  ஆயுளும் மிக்க நூறு பிள்ளைகள் வேண்டும் '' 
                                                                               '' நான்காவது வரத்தையும் தந்தோம் .......இனி நீ திரும்பிச் செல் ....''
                                                                               '' சொன்ன சொல் தவறாதவரே ..........தங்களைப் போன்ற பெரியோர்கள் வரத்தைக் கொடுத்து விட்டு ,பின்பு ஏன் கொடுத்தோம் என்று வாட்டமடைய மாட்டார்கள் !.........தர்மவானே ....சற்று முன்பு தாங்கள் எனக்கு '' புத்திரபாக்கியம் '' எனும் வரத்தை அருளியுள்ளீர்கள் ........
என்னைப் போன்ற பதிவிரதைகள் எப்போதும் கணவன் மூலம் புத்திரர்களை உண்டு பண்ணிக் கொள்வதே தர்மம் !........அத்தகைய பாக்கியம் தம்பதிகளின் சேர்க்கையினாலன்றோ உருவாகும் ?.........எனவே , தாங்கள் அளித்த இவ் வரத்தை உறுதிப் படுத்த வேண்டுமெனில் , என் கணவர் பிழைக்க வேண்டும் .....
....உம்முடைய வாக்கு சத்தியவாக்காய்த் திகழ வேண்டும் ......''
                                                                         சாவித்ரியின் இவ்வார்த்தைகளைக் கேட்டதும் அசந்து போய்விட்டான் எமன் !........
                                            வெகு சாமர்த்தியமாய்த் தன்னை மடக்கிவிட்டதை உணர்ந்தான் !......அவளது அறிவுகூர்மையையும் , பதிவிரதாதர்மத்தையும் எண்ணி மெச்சியவனாய் பாசக் கயிற்றை அவிழ்த்து விட்டவாறு , 
                                                                                       '' பெண்ணே .....குலத்தை மகிழ்விப்பவளே .......இதோ உன் கணவன் .......மகிழ்ச்சியோடு இவனை அழைத்துச் செல் ...
                                 இவன் நானூறு ஆண்டுகள் உன்னோடு வாழ்வான் !...''
சத்தியவானின் உயிரை விட்டு விட்டுச் சென்றான் எமன் !.........பதிவிரதையான சாவித்ரியால் அவள் கணவன் , மாமனார் , மாமியார் , தாய் மற்றும் தந்தை அனைவரும் கரைஎற்றப்பட்டதுடன் அவர்கள் குலமும் தழைத்தது !......
                                                                                                   மேற்கண்ட இச் சரிதமானது , '' பதிவிரதா மகாத்மிய பருவத்தில் '' மார்கண்டேய மகரிஷி தர்மபுத்திரருக்கு 
கூறுவதாய் அமைந்துள்ளது ; 
                                                                                          '' உருக்காத வெண்ணையும் ஓரடையும் நான் படைத்தேன்.......
                                                                                          ஒரு காலும் என் கணவன் பிரியாதிருக்க வேண்டும் ''                                              
 என்று உமையவளை  பிரார்த்தனை செய்தபடி மஞ்சள் கயிற்றை கழுத்தில் அணிந்து மங்கையர் அனைவரும் வேண்டிய வரங்களைப் பெறுவோமாக ....







அகத்திய கீதை............

ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி துணை
இராமபிரானுக்கு  அகத்தியரால்  உபதேசிக்கப் பட்ட கீதை
....................பொதுவாக கீதை என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது , குருக்ஷேத்திர களத்தில் , கிருஷ்ண பரமாத்மாவால் , பார்த்தனுக்கு உபதேசிக்கப் பட்ட பகவத்கீதையாகும்  ; இது அனைவரும் அறிந்த ஓன்று. ஆனால்,
பதினெண் புராணங்களுக்கு நடுவில் , மேலும் பல கீதைகள் குறிப்பிடப்பட்டுள்ளன ;
அவற்றுள் முதன்மையாகத்  திகழ்வது '' அகத்திய கீதையாகும் ;
மாபெரும் தவமுனி அகத்தியப் பெருமான் ;
தமிழ் வளர்த்த சான்றோர்களில் முதன்மைப் பெற்றவர் ...........
கடல் கொண்ட மதுரையில் முதற்சங்கம் இருந்த காலத்தில் தலைமைப் புலவராக சிவபெருமான் வீற்றிருந்த போது , முதன்மைப் புலவனாக இருந்து தமிழ் ஆராய்ச்சி செய்த தனிப் பெரும் புலவர் ;
தமிழகம் சிறந்து விளங்குவதற்கு காவிரியாற்றையும் , தாமிரபரணியாற்றையும் தந்தவர் ;
மேலும் , அசுர குலத்து இராவணன் தமிழர்களுக்கு இன்னல் விளைவித்தபோது , அவனைத் தனது இசையால் வென்று இலங்கைக்கு ஓட வைத்தவர் ;
எல்லாவற்றுக்கும் மேலாக சிவனருள் பெற்ற தவயோகி!........
'' அகத்தியனை உவப்பானை '' என்று தேவாரத்தில் சிறப்பித்துக் கூறப் படும் இம் மாமுனிக்காக , பெருமான் கயிலை மலையில் நடை பெற்ற தமது திருமணக் காட்சியை , தென்னகத்தில் இருபத்தியொரு இடங்களில் மீண்டும் , மீண்டும் இவருக்கு  காட்டி அருளினார்  என்றால் இவரது பக்திக்கு ஈடு இணை கூற முடியுமோ ?.............
                                                             
                                                         அப்பேற்பட்ட பெருமை வாய்ந்த இவருக்கு சிவபெருமானால் உபதேசிக்கப் பெற்றது '' சிவகீதை ''
என்பது ; இதனை , அகத்தியப் பெருமான் , பஞ்சவடியில் சீதையை இழந்து துன்புற்ற இராமபிரானுக்கு உபதேசித்ததால் '' அகத்தியகீதை '' என்று அழைக்கப் படலாயிற்று !.............உபநிஷதங்களின் சாரமாகத் திகழும் இதனுள் பதினாறு அத்தியாயங்கள் உள்ளன ; ....அகத்தியரிடம் கேட்டுக் கொண்ட இராமபிரான் , பின் அவரிடமே சிவதீட்சை பெற்றுக் கொண்டு கடுமையான பாசுபத விரதத்தை அனுஷ்டித்தார் ; அகமகிழ்ந்த பெருமானும் அவருக்கு காட்சி கொடுத்து
, சிவகீதையின் சாரத்தை மீண்டும் உபதேசித்து , பாசுபதாஸ்திரத்தை அளித்து , இராவணனை  வெற்றி கொள்ளும் மந்திரத்தையும் அளித்தார் !
............................................................................................................மட்டுமின்றி , இராமபிரானுக்கு அகத்தியபெருமான் '' ஆதித்யஹிருதயம் '' எனும் நூலையும் உபதேசித்து , சூரியனிடமிருந்து பல அரிய வரங்களைப் பெற வைத்தார் !

மகாசிவராத்திரியில் வீரபத்திரர் வழிபாடு............

     
                                                                       ௨
                                         ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி துணை
உலகில் மிக உயர்ந்த செல்வம் வீரமேயாகும் ; வீரத்தால் அடைய முடியாத பொருளில்லை ; அதனாலேயே நமது தெய்வங்கள் வீர தெய்வங்களாக சித்தரிக்கப்படுகின்றன ; காளி , துர்க்கை , சப்தமாதர்கள் , முதலான தெய்வங்கள் போர் தெய்வங்களாக போற்றப்படுகின்றனர் ;
                                                                                                                  மிகச் சாந்தமாக விளங்கும் மகாலட்சுமி கூட , ''கோலாசுரன்'' என்கிற அசுரனை உக்ரமான போரில் அழித்து '' கோலாசுர பயங்கரி '' என்று பெயர் கொண்டுள்ளாள் !
                                                                                                                  திருமால் தசாவதாரங்கள் எடுத்து அநேக அசுரர்களை அழித்தார் ; சாந்த சொரூபியான  பிரம்மதேவன் கூட போர் கோலம் பூண்டு அசுரர்களை அழித்ததாக புராணங்கள் கூறுகின்றன ;
                                                                                                                எல்லையற்ற வீரத்தின் இருப்பிடமாகத் திகழும் சிவபெருமானும்  , உலக நலம் பொருட்டு அனேக அசுரர்களை வென்றடக்கி அருள் புரிந்துள்ளார் ; அவை , அவருடைய அளவற்ற ஆற்றலுக்கும் , வீரத்துக்கும் அடையாளமாக உள்ளன ; அவை அனைத்தையும் நம்மால் நினைவில் நிறுத்த முடியாது என்பதால் ஆன்றோர்கள் அவற்றில் எட்டை வரிசைப் படுத்தி
                                                                                                      '' அஷ்ட வீரட்டம் '' என்று போற்றி நாம் வணங்க வகை செய்துள்ளனர் ;
                                                                        அவை
                                                                                                        பிரம்மனின் சிரம் கொய்தது , ....( கண்டியூர் எனும் தலத்தில் )..
                                                                                                       எமனை காலால் உதைத்து அழித்தது ...( திருக்கடவூர் எனும் திருத்தலத்தில் )
                                                                                                        முப்புரம் எரித்தது ( திருவதிகை எனும் தலத்தில் )
                                                                                                        யானையை உரித்து அதன் தோலை போர்வையாகப் போர்த்திக் கொண்டது ( வழுவூர் எனும் தலத்தில் )
                                                                                                      தட்சனின் யாகத்தை அழித்தது ......( திருப்பறியலூர் எனும் தலத்தில் )
                                                                                                      அந்தகனை வதைத்தது ....................( திருக்கோவலூர் எனும் தலத்தில் )
                                                                                                      காமனை அழித்தது ...........................( கொருக்கை எனும் தலத்தில் )
                                                                                                      ஜலந்தரனை அழித்தது ....................( திருவிற்குடி எனும் தலத்தில் )
இப்படி வரிசைப் படுத்தியுள்ளனர் ;
                                                                            இவற்றுள் , இரண்டில் மட்டும் பெருமான் தான் நேரடியாகச் செல்லாமல் தன அருட்பார்வையில் உண்டான உக்கிரகுமாரர்களாகிய வீரபத்திரர் , பைரவர் ஆகியோரை அனுப்பி , முறையே பிரம்மன் , தட்சன் ஆகியோர் தலைகளைக் கொய்து தண்டித்து அருள் புரிந்ததாக புராணம் கூறும் ; அதிலும் வீரபத்திரரை அனுப்பி பெற்ற வெற்றி உன்னத வெற்றியாகவும் தனி வரலாறாகவும் போற்றப்படுகிறது ; மேற்சொன்ன எட்டு வீரட்டங்களுள் , ஏழில் தேவர்களுக்கு உதவவே பெருமான் போர் புரிந்தார் ; ஆனால் , தட்ச சங்காரத்தில் மட்டும் தேவர்களுக்கு எதிராகப் போரிட்டு அவர்களைக் கடுமையாக தண்டித்தார்  ; அவர்கள் ஒவ்வொருவரும் வீர குமாரனாகிய வீர பத்திரரால் தண்டிக்கப் பட்டது  பெருமானின் தனித்தனி வீரதீர பராக்ரமங்களாகவே போற்றப் படுகின்றன ;
                                                                                      தட்சனையும் , அவனது யாகத்தையும் அழிக்க சிவபெருமானால் தனது நெற்றிக் கண்ணில் இருந்து தோற்றுவிக்கப் பட்ட வீரபத்திர மூர்த்தி தனிப் பெரும் தெய்வமாகவே போற்றப்படுகிறார் ; பராசக்தியால் உண்டாக்கப் பட்ட பத்ரகாளி , அவருக்கு தேவியாகத்  திகழ்கிறாள் ; இவ்விருவரும் தட்ச யாகத்தை சம்ஹரித்த நிகழ்வு புராணங்கள் , வேதம் , மகாபாரதம் மகாஸ்காந்தம் பாகவதம் முதலானவற்றிலும் ....மற்றும் தமிழில் ,தட்சயாகபரணி , கந்தபுராணம் , காஞ்சிப்புராணம் , பறியலூர் புராணம் முதலியவற்றிலும் காணலாம் ;
                                                                                '' வீரம் '' என்பதற்கு '' அழகு '' என்றும் , '' பத்திரம் '' என்பதற்கு '' காப்பவன் '' என்றும் பொருள் ;
தென்னகத்துச் சைவர்கள் வீரபத்திரரை  துணைத் தெய்வமாக தனிச் சன்னதியில் வைத்து வழிபடுகின்றனர் ; பின் , வட நாட்டிலிருந்து வீர சைவர்கள் தென்னாட்டிற்குப் பரவிய பின்னரே வீரபத்திரருக்கு தனி ஆலயங்கள் அமைக்கும் வழக்கம் வந்ததென்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர் ;
                                                                         தமிழகத்தில் திருவண்ணாமலை , மயிலாப்பூர் , அனுமந்தபுரம் , தாராசுரம் , கும்பகோணம் , திருக்கடவூர் , மற்றும் பெரும்பேர்கண்டிகை முதலான தலங்களில் வீரபத்திரர் ஆலயங்கள் உள்ளன ;
                                                                          சென்னை - திருச்சி செல்லும் நெடுஞ்சாலையில் ஏறத்தாழ சென்னையிலிருந்து 35 கி.மீ தொலைவில் சிங்கபெருமாள் கோயில் எனும் ஊர் உள்ளது ; இவ்வூரின் தென் கிழக்கே 7 கி. மீ தொலைவில் அமைந்துள்ள அனுமந்தபுரம்  ஆலயம் வீரபத்திரருக்கான சிறப்பு ஆலயமாக கருதப்படுகிறது ;
                                 சாலை ஓரத்தில் வடக்கு நோக்கியவாறு பெரிய அளவில் ஆலயம் அமைந்துள்ளது ; ஆலயத்தின் முன்புறம் பெரிய குளமும் , கிணறும் உள்ளன ; ஆலய முகப்பினைக் கடந்ததும் , நீளமான தகர கொட்டகை உள்ளது ; அதை ஒட்டி ஆலயத்தைச் சுற்றி அகன்ற பிராகாரம் உள்ளது ; பிராகாரத்தில் அமைந்துள்ள துர்க்கை சன்னதி , மற்றும் பத்ரசண்டீசர் சன்னதியையும் வணங்கி , பிராகாரத்தை வலம் வந்து மகாமண்டபத்தை அடைகிறோம் ; அங்குள்ள நந்திதேவரை வணங்கி , பின் உல் வாயிலிலுள்ள முருகன் , விநாயகரை வணங்கி ..........கிழக்கு நோக்கிய சன்னதியில் எழுந்தருளியிருக்கும் பத்ரகாளியையும் வணங்கி .......................பின் அர்த்தமண்டபம் கடந்து கருவறையில் வீற்றிருக்கும் வீரபத்திரரை தரிசிக்கிறோம் ;
                                                                                     கிட்டத் தட்ட எட்டு அடி உயரம் கொண்ட கம்பீரமான உருவத்துடன் , மேற்கரங்களில் வில்லும் , அம்பும் , கீழ்க் கரங்களில் கத்தி , கேடயத்தையும் தாங்கியவராக எழுந்தருளியுள்ளார் !..... இவரைச் .சுற்றி அமைந்துள்ள கல்திருவாசியில் வலது கால் புறத்தில் தட்சன்
நின்றிருக்க ........வீரபத்திரரின் தலையில் சிவலிங்கம் அமைந்துள்ளது ! வீரபத்திரர் எழுந்தருளிய சுவாரசியமான வரலாற்றை சற்று பார்ப்போமா.............
                                                                                                 தட்ச சம்ஹாரத்திற்குப் பின் , வீரபத்திரரும் , பத்ரகாளியும் தமது கணங்களுடன் பெருமானை வணங்க...........பெருமான் அவர்களை தென்னகம் சென்று குடியேறும்படி அனுக்ரஹிக்க .........அதன் படி அவர்கள் விண் வழியே சென்று கொண்டிருந்த போது
வெற்றிலைத் தோட்டத்தின் நடுவே அமைந்துள்ள இந்த இடம் அவர்களுக்குப் பிடித்துப் போகவே ..........இங்கு தங்கினர் ;
தட்ச யாகத்தில் உயிரிழந்து பேய்களான மனிதர்களும் , தேவர்களும் அவர்களைப் பின் தொடர்ந்து வந்தனர் ; வீரபத்திரர் இங்கு சிவ பூஜை செய்து அவர்களுக்கு விபூதி அளிக்க அவர்களின் பேய் வடிவம் ஒழிந்தது !........மனம் மகிழ்ந்த அவர்கள் அவரை வணங்கி ,
.........................................................                      '' சிவ குமாரனே ......எங்கள் மனக்கலக்கம் அழிந்ததுடன் பேய் வடிவமும் தொலைந்தது போல் ......  உம்மை வழிபடும் அன்பர்களுக்கும் நடை பெற வேண்டும் '' என்று வேண்டினர் ; அதன் படி இன்றளவும் மன நலம் குன்றியோர் , மற்றும் பில்லி, சூன்யம் , ஏவல் இவற்றால் துன்புறுவோர் இங்கு வந்து இவரை வழிபட்டு குறை நீங்கப் பெறுகிறார்கள் !
                                                                                                                 
                      '' அரன் '' மைந்தனாகிய வீரபத்திரர் வீற்றிருப்பதால் இத்தலம் அரன்மைந்தபுரம் என்றழைக்கப்பட்டு , பின் மருவி ...அனுமந்தபுரம் ஆனதென்பர் ;
                                                                                           இவ்வாலயத்தில் எழுந்தருளியிருக்கும் வீரபத்திரருக்கு ஒரு விசேஷ அம்சம் உண்டு !
                                                                               அதாவது , இம் மூர்த்தி தன்னை உள்ளன்புடன் வழிபடுவோர்க்கு
                                                                                காலை வேளையில் குழந்தைப் பொலிவுடனும் ,
                                                                                 உச்சி வேளையில் வாலிபத்தோற்றத்துடனும் ,
                                                                                  மாலை வேளையில் வயோதிகததோற்றத்துடனும் காட்சியளிக்கிறார் !!
அதிலும் வெள்ளிக் கவசத்துடன் காணும் போது மனம் பரவசமாகிறது !,,,நெஞ்சு குளிர்கிறது !
இக்கோயிலில் நான்குகால பூஜை சிவாச்சாரியாரால் நடத்தப் படுகிறது ;
                                                                           மகா சிவராத்திரியில் பெரிய இடப வாகனத்தில் வீரபத்திரர் வீதியுலா வரும் காட்சி கண்கொள்ளா காட்சியாகும் ; இவருக்கு வெற்றிலைப் படல் சாற்றுவது மிக விசேஷமான பிரார்த்தனையாகக் கருதப் படுகிறது ; ( வெற்றியைக் குறிக்கும் இலையே வெற்றிலையாகும் )
வெற்றிலைபடல் என்பது , சுவாமியைச் சுற்றி அதற்கென உள்ள பிரபையில் வெற்றிலைகளை பொருத்தி அமைக்கின்றனர் ; அரை வெற்றிலைப் படலுக்கு
6400 வெற்றிலைகளும் , முழுப்படலுக்கு 12800 வெற்றிலைகளும் பயன் படுத்தப் படுகின்றன ; மேலும் வெண்ணைக்காப்பும் இங்கு சிறந்த பிரார்த்தனையாகும் ; ஒவ்வொரு அமாவாசையன்றும் திரள் திரளாக மக்கள் வந்து வழிபாடு செய்கிறார்கள் !.........குறிப்பாக மன நலம் குன்றியோர் , பில்லி சூன்யம் இவைகளால் பாதிக்கப் பட்டோர்களுக்கு சிறப்பு வழிபாடு செய்து நீக்கப் படுகின்றன ;